×

திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் திமுக உறுப்பினர்களின் தொடர் கூட்டம்

கும்மிடிப்பூண்டி, நவ. 19:  திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், பகுதிகளில் திமுக பொது உறுப்பினர்களின் கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது. முதலாவதாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பேரூர் பகுதிகளில் 21ம் தேதி, திருத்தணி நகரம், ஆர்.கே.பேட்டை கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், பள்ளிப்பட்டு பேரூர், ஒன்றியம், பொதட்டூர்பேட்டை பேரூரில் 22ம் தேதி கூட்டங்கள் நடைபெறும்.மேலும், மீஞ்சூர் வடக்கு, தெற்கு, சோழவரம் ஒன்றியதில் 23ம் தேதி, எல்லாபுரம் தெற்கு, வடக்கு, ஆரணி பேரூர், பூண்டி கிழக்கு, ஊத்துக்கோட்டை பேரூரில் 24ம் தேதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு, மேற்கில் 25ம் தேதி, திருத்தணி ஒன்றிய, நகர பேரூர் செயலாளர் தலைமையில் வரும் 28ம் தேதி காலை, மாலை நேரங்களில் என தொடர்ச்சியாக திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இக்கூட்டங்களில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் சி.எச்.சேகர், மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், ஜெ.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK ,Thiruvallur ,
× RELATED ஆஸி. தொடர் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக இருக்கும்: பும்ரா சொல்கிறார்