×

சர்க்கரை நோயால் காலை அகற்ற பரிந்துரை அரசு மருத்துவமனையில் அச்சக ஊழியர் தற்கொலை

சென்னை, நவ.19: வியாசர்பாடி கிருஷ்ணமூர்த்தி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன் (41). தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையில் ஊழியராக பணியாற்றி வந்தார். சர்க்கரை நோய் பாதிப்பால் இவரது காலில் புண்கள் அதிகளவில் இருந்தது. இதற்கு அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதற்கிடையே, சர்க்கரை நோய் முற்றியதால், இவரது ஒரு காலை அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். நேற்று அறுவை சிகிச்சை செய்யப்போவதாக தெரிவித்து இருந்தனர். இதனால், மனமுடைந்த அர்ஜூனன், நேற்று அதிகாலை மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள கழிவறைக்கு சென்று, ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அர்ஜூனன் உடலை கைப்பற்றி, பிரேத பிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை