×

செங்கை மாவட்ட கலெக்டர், எஸ்பி அலுவலக இடம் அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு

செங்கல்பட்டு, நவ. 19: செங்கல்பட்டு மாவட்ட துவக்க விழா நடைபெறும் இடம் மற்றும் கலெக்டர். எஸ்பி அலுவலகத்தை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம் துவக்க விழா வரும் 29ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் கலெக்டர், எஸ்பி அலுவலகத்தை முதல்வர் திறக்கிறார். இதையொட்டி கலெக்டர், எஸ்பி ஆகியோருக்கான அலுவலகங்களுக்கான இடத்தை நேற்று அமைச்சர் பெஞ்சமின், காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தனர்.அப்போது, செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் அரசு ஐடிஐ மைதானத்தை பார்வையிட்டனர். விடுதி கட்டிடம், மருத்துவக்கல்லூரி மைதானம், கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் கட்டும் இடங்கள், வரைபடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்பி மரகதம் குமரவேல், சல்குரு, நகர செயலாளர் செந்தில்குமார்  ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Office Space Minister ,Officers Inspection ,SP ,
× RELATED திருப்புத்தூர், சிங்கம்புணரி...