×

அய்யப்பன்தாங்கல் கூட்டுறவு சங்க தேர்தல் முடிவு

பூந்தமல்லி, நவ.19: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் அய்யப்பன்தாங்கல்  நகர  கூட்டுறவு கடன் சங்க தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. அப்போது முடிவு அறிவிப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. இதையடுத்து தேர்தல் முடிவை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நேற்று முடிவு அறிவிக்கப்பட்டது.இதில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக  மாணவரணி செயலாளரும், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி அதிமுக செயலாளருமான  ஏ.என்.இ.பூபதி தலைவராகவும்,  துணைத்தலைவராக   பரணிபுத்தூர் ஊராட்சி அதிமுக செயலாளர் எம்.சங்கர்  ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.மேலும் உறுப்பினர் பதவிக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து கூட்டுறவு சங்க அலுவலகத்தில், வெற்றி பெற்றவர்கள் அதற்கான   சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி  கஜலட்சுமியிடம் இருந்து  பெற்று கொண்டனர்.


Tags : election ,Ayyappan Thangal Co-operative Society ,
× RELATED சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்...