×

மாவட்டம் பிரிக்கப் பட்டதால் காஞ்சி புதிய எஸ்பி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம், நவ.19: காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக சாமுண்டீஸ்வரி நேற்று பொறுப்பேற்று கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு புதிய மாவட்ட தொடக்க விழா, வரும் 29ம் தேதி, செங்கல்பட்டில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக இருந்த கண்ணன், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதைதொடர்ந்து, சென்னை சைபர் செல் எஸ்பியாக இருந்த சாமுண்டீஸ்வரி, காஞ்சிபுரம் எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்று கொண்டார்.குரூப் 1 அதிகாரியான சாமுண்டீஸ்வரி, எம்ஏ, எம்பில், எம்பிஏ,  பிஎச்டி படித்துள்ளார். 18 சித்தர்கள் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதற்கு முன், தமிழ்நாடு போலீஸ் அகாடமி , சிபிசிஐடி சைபர் செல், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kanchi ,SP ,district ,
× RELATED புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை காஞ்சி...