×

ராகுல்காந்தியை கண்டித்து பாஜவினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு. நவ. 19: செங்கல்பட்டு மாவட்ட பாஜ சார்பில், ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக பாஜ அரசின் மீது குற்றம் சாட்டிய ராகுல்காந்தியை கண்டித்து செங்கல்பட்டு பழைய  பஸ் நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்ட பாஜ தலைவர் சிவசெந்தமிழ்அரசு தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் நரேந்திரன், மாவட்ட துணை தலைவர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கல்பட்டு நகர தலைவர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பாஜ மாநில செயலாளர் ராகவன், மாநில மகளிரணி செயலாளர் மீனாட்சி, நகர நிர்வாகிகள் சசிகுமார், இளைஞரணி பொதுச் செயலாளர் விஜயகுமார், இளைஞரணி முன்னாள் மாவட்ட தலைவர் மகேஸ்வரன், ஒன்றிய நிர்வாகி பிரகாஷ், இளைஞரணி செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Bajawans ,protest ,Rahul Gandhi ,
× RELATED கண்டன ஆர்ப்பாட்டம்