×

இலவச மருத்துவ முகாம்

திருக்கழுக்குன்றம், நவ. 19: திருக்கழுக்குன்றம் அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது.உயிர் காக்கும் கரங்கள் மற்றும் தேசிய மக்கள் பாதுகாப்பு கழகம், அனைத்து கிருஸ்துவ கூட்டமைப்பு, திருக்கழுக்குன்றம் லயன்ஸ் கிளப், அகில இந்திய டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் ரத்ததான முகாம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்தி மங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.காசிபுதியராஜா தலைமை தாங்கினார்.     லயன்ஸ் சங்க நிர்வாகிகள்    லட்சுமி ரகுராம், பால்கனி, சங்கர், மகாவீர் சந்த், வினோத்குமார், காசிரவிராஜா, கிட்டு பிரபாகரன், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.     சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ இதயவர்மன் கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்தார்.
இதில் கண், பல், எலும்பு உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்து, இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், ரத்ததானம் செய்யப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Free Medical Camp ,
× RELATED உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா,...