×

கொல்லம் - சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கொல்லம்- சென்ட்ரல் இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கொல்லம்- சென்ட்ரல் இடையே சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 7, 14, 21, 28 மற்றும் ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

* சென்ட்ரல்- கொல்லம் இடையே டிசம்பர் 1, 8, 15, 29 ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
* கொல்லம்- சென்ட்ரல் இடையே டிசம்பர் 2, 9, 16, 23 ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்டரல் வந்தடையும்.
* சென்ட்ரல்- கொல்லம் இடையே சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 7, 14,28 ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
* திருவனந்தபுரம்- சென்ட்ரல் இடையே டிசம்பர் 4, 11, 18, 25 ஜனவரி 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
*  சென்ட்ரல்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு கட்டண ரயில் டிசம்பர் 5, 12, 19, 26 ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான  முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Southern Railway ,Kollam Central ,
× RELATED ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 2 ...