×

சிறுமிக்கு பாலியல் தொல்லை கார்பென்டர் போக்சோவில் கைது

சென்னை: தரமணி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (41), கார்பென்டர். அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த இவரை, புகாரின் பேரில் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

* புழல் லட்சுமிபுரம், ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் பென்சில் பிரசாத் (28). ஊர்க்காவல்படை வீரர். இவரது மனைவி ஸ்ரீலட்சுமி (24). தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். பிரசாத்துக்கு மதுப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த லட்சுமி நேற்று முன்தினம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் செல்போனை சார்ஜ் போட வைத்திருக்கும் போது, அவற்றை திருடி வந்த, சூளைமேடு பகுதியை சேர்ந்த செட்டியார் (எ) நாகராஜ் (32) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 5 ெசல்போன்களை பறிமுதல் செய்தனர்.
* வேளச்சேரி ஏ.எல் முதலி தெருவை சேர்ந்த கண்ணாயிரம் (55), பெயின்டில் கலக்கும் தின்னரை குடித்துவிட்டு இறந்தார்.
* கொரட்டூர் கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்த மகேஷ்குமார் (34) வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் நகையும், பக்கத்து வீட்டில் வசிக்கும் டில்லி என்பவரது வீட்டில் 4 சவரன் நகையும் கொள்ளையடித்த வழக்கில், வில்லிவாக்கம் பாரதி நகர், 2வது தெருவை சேர்ந்த சூர்யா (21), திருமுல்லைவாயலை சார்ந்த மதன்குமார் (22), வில்லிவாக்கத்தை சேர்ந்த விஷ்வா (24) ஆயோரை போலீசார் கைது செய்தனர்.
* கொளத்தூர் ஹரிதாஸ் நகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி (42), மாதவரம் மஞ்சம்பாக்கம் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். மாதவரம் மேம்பாலத்தில் சென்றபோது, பைக்கில் வந்த 2 ஆசாமிகள், விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றனர். ஜெயலட்சுமி செயினை பிடித்துக்கொண்டு போராடியதால், அவரை கீழே தள்ளி விட்டு, செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதில் விஜயலட்சுமிக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Carpenter Bokshoe ,
× RELATED ஊரணியில் மூழ்கி சிறுமி பலி