×

அரியலூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர்,நவ.14: அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (15ம் தேதி) நடைபெறுகிறது.
 இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னையை சேர்ந்த முன்னணி நிறுவனங்களான டி.வி.எஸ் மற்றும் ஓரல்பி நிறுவனங்களுக்கு தேவையான டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 28 வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே, இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை (15ம் தேதி) காலை 10 மணிக்கு அரியலூர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகைபுரிந்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...