×

சிறுகமணி ஆராய்ச்சி நிலையத்தில் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி

அரியலூர், நவ.14: அரியலூர் மாவட்டம் திருமானூர் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் கரும்பு சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் வெளிமாவட்ட கண்டுணர் சுற்றுலா இனத்தின்கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பத் தலைப்பில் சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.இப்பயிற்சியை சிறுகமணி கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சித்ரா துவக்கி வைத்து நீடித்த நிலையான கரும்பு சாகுபடியின் முக்கிய தொழில்நுட்பங்களான ரகங்கள் தேர்வு, ஒற்றைப்பரு கொண்டு நாற்று தயாரித்தல், ஊடுபயிர் சாகுபடி, சொட்டுநீர் பாசனம் மற்றும் நீர்வழி உர மேலாண்மை ஆகியவற்றை பற்றி விரிவாக கூறினார். உழவியல் துறை பேராசிரியர் நாகேஸ்வரி கரும்பில் மறுதாம்பு பராமரிப்பு தொழில்நுட்பங்கள், புதிய கரும்பு ரகமான அட்டுல்யாவின் பண்புகள் மற்றும் புதிய ரகங்கள் வெளியிடுதல் தொடர்பாக நடைபறும் ஆராய்ச்சி குறித்து விளக்கினார்.

மேலும் விவசாயிகள் சிறுகமணி கரும்பு ரகங்கள், புதிய கரும்பு ரகம் அட்டுல்யா மற்றும் நெல் டி.கே.எம் 13 நடப்பட்டுள்ள வயல்களை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியினை அட்மா தெழில்நுட்ப மேலாளர் கலைமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இச்சுற்றுலாவிற்கு கரும்பு சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகள் கோத்தாரி சர்க்கரை ஆலையின் சார்பாக தேர்வு செய்து அனுபப்பட்டனர்.

Tags : Sugarcane Farmers ,Kurukmani Research Station ,
× RELATED வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில்...