×

குகைவழிப்பாதை சேறும், சகதியுமானதால் வாகனஓட்டிகள் அவதி

கரூர், நவ.14: குகைவழிப்பாதையில் சேறும், சகதியுமானதால் வாகனஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். பெரிச்சிபாளையத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் இருப்புப்பாதையை கடந்துசெல்வதற்காக குகைவழிப்பாதை உள்ளது. மழைநீர் தேங்கி குகைவழிப்பாதையில் சேறும்சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் குகைவழிப்பாதையை கடந்துசெல்பவர்கள் விழுந்து எழுந்து செல்கின்ற நிலைமை உள்ளது. குகைவழிப்பாதையை கட்டும்போதே மழைநீர் தேங்காத வகையிலும், சேறுசகதி ஏற்படாதவகையிலும் திட்டமிட்டு வடிமைக்காததால் இந்த நிலை ஏற்படுகிறது. சேற்றை அகற்றி போக்குவரத்துக்கு வழி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cave lane ,motorists ,
× RELATED தங்கவயலில் ஒட்டு போட்ட சாலையை அடித்து சென்ற கனமழை: வாகன ஓட்டிகள் அவதி