×

அனந்தீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்

சிதம்பரம், நவ. 14:  சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவர் பூஜித்து வழிபட்டு வந்த சவுந்தரநாயகி உடனாகிய அனந்தீஸ்வரர் கோயில் உள்ளது. அனந்தீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
பழமை வாய்ந்த இக்கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடந்தது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மாலையில் அனந்தீஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அன்னம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரத்தில் அனந்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தீபம் ஏற்றி சிவ ஸ்தோத்திரங்களை கூறி சாமியை வழிபட்டனர். பூஜைகளை ராஜா குருக்கள் குழுவினர் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

Tags : Anantheeswarar Temple ,
× RELATED குமரி கோயில்களில் அன்னாபிஷேகம்