மண் பரிசோதனை, நெல் சாகுபடி பயிற்சி முகாம்

சின்னசேலம், நவ. 14: சின்னசேலம் அருகே காளசமுத்திரத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் மகசூலை அதிகரிக்க மண் பரிசோதணை, நெல் சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது. அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகுதுரை தலைமை தாங்கினார். முகாமில் விவசாயிகள் மற்றும் வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மகசூலை அதிகரிக்க விவசாயம் செய்யும்முன் மண் பரிசோதனை செய்ய வேண்டிய முறைகள், அவசியம் குறித்து பேராசிரியர்கள் சந்தோஷ்குமார், பூவிழிராஜா ஆகியோர் செயல் விளக்கத்துடன் செய்து காட்டினார்கள். பின்னர் அதற்கேற்ற வகையில் மண்ணில் உள்ள சத்துக்களை அறிந்து அதற்கேற்ற வகையில் நீர் மேலாண்மை, நோய் மேலாண்மை குறித்தும் விரிவாக பேசினார்கள். இதில் விவசாயிகள் கேட்ட சந்தேகங்களுக்கு பேராசிரியர்கள் சந்தோஷ்குமார், பூவிழிராஜா ஆகியோர் விரிவான விளக்கங்களை அளித்தனர். இந்த முகாம் மூலம் நல்ல பல கருத்துக்களை தெரிந்து கொண்டதாக வேளாண்துறை மாணவர்களும், விவசாயிகளும் கூறினர்.

Related Stories:

>