விழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவிகள்

புதுச்சேரி,  நவ. 14: புதுவையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கடலூரை சேர்ந்த தனியார்  பள்ளி மாணவிகள் நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.  புதுவையில் பள்ளி,  கல்லூரி மாணவர்கள் ரத்ததானம், எய்ட்ஸ் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு  விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று புதுவையில்  கடலூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் ெஹல்மெட் அணிந்து சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.கம்பன் கலையரங்கில் தொடங்கிய  இந்த பேரணியை கிழக்கு எஸ்பி மாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த  பேரணியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் கையில் விழிப்புணர்வு  பதாகைகளை ஏந்தியும், ஹெல்மெட் அணிந்தபடியும் சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஹெல்மெட் அணிந்து பைக்  ஓட்டிவந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை காந்தி சிலை முன்பு நிறைவுற்றது.

Related Stories:

>