×

இடைப்பாடி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ₹50க்கு விற்பனை

இடைப்பாடி, நவ.14:  இடைப்பாடி சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ₹50க்கு விற்பனையானது. ஆக மொத்தம் ₹32 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.இடைப்பாடியில் நேற்று வாரச்சந்தை கூடியது. இதில், பல்வேறு இடங்களிலிருந்து 91 டன் காய்கறிகள் மற்றும் ஆடு, சேவல், கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். ஆடு ஒன்று ₹4900 முதல் ₹5500 வரையிலும், வளர்ப்பு குட்டி ஆடு ₹1200 முதல் ₹1500 வரையிலும், சேவல் ₹600 முதல் ₹900 வரையிலும், கோழி ₹150 முதல் ₹500 வரையிலும் விற்பனையானது. காய்கறிகளை பொறுத்தவரை கோஸ் கிலோ ₹20க்கும், கேரட் ₹50, பீன்ஸ் ₹30, பீட்ருட் ₹35, மிளகாய் ₹30, உருளை ₹20 முதல் ₹25க்கும், முள்ளங்கி ₹20, தக்காளி ₹20க்கும், பெரிய வெங்காயம் ₹50 முதல் ₹60 வரையிலும், சின்ன வெங்காயம் ₹30 முதல் ₹45 வரையிலும், முருங்கைக்காய் கிலோ ₹130 முதல் ₹150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆக மொத்தம் வாரச்சந்தையில் காய்கறி மற்றும் கால்நடைகள் விற்பனை மூலம் ₹32 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED ஆண்டுதோறும் 80 ஆயிரம் மெட்ரிக் டன்...