×

சாத்தூரில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

சாத்தூர், நவ. 14: சாத்தூரில் விதிமீறிச் செல்லும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் உள்ள பிரதான சாலையில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், கோயில்கள், நீதிமன்றங்கள் ஆகியவை உள்ளன. இந்த சாலையில் ஏராளமான தீப்பெட்டி தொழிற்சாலை குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களிலிருந்து லாரிகள், சரக்கு வாகனங்கள் மூலம் தீப்பெட்டி பண்டல்களை வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில், இந்த கனரக வாகனங்கள் விதிமுறைகளை மீறி, அதிக லோடுகளை ஏற்றி சாத்தூர் நகருக்குள் செல்கின்றன. இதனால், சாலையின் குறுக்காக செல்லும் மின்கம்பிகளில் உரசி, மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த வாகனங்கள் வேகமாகச் செல்வதால், டூவீலரில் செல்வோர், பாதசாரிகள் விபத்து அச்சத்தில் செல்கின்றனர். எனவே, சாத்தூரில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்களை முறைப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், நகருக்குள் பகல் நேரங்களில் செல்ல அனுமதிக்கக் கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : traffic accidents ,
× RELATED கோவை மாநகரில் வாகன விபத்து, விதி மீறலை...