×

பவுர்ணமியை முன்னிட்டு மாதா மலையில் கிறிஸ்தவர்கள் கிரிவலம்

சேத்துப்பட்டு, நவ.14:  சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் மாதா மலையில் நேற்று முன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள், வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தூயலூர்து அன்னையுடன் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து, குழந்தை இயேசு, தூயலூர்து அன்னைக்கு  மெழுகுவர்த்தி ஏற்றியும், முடி காணிக்கை செலுத்தியும், மாலை அணிவித்தும் தங்களது நேர்த்திகடன் செலுத்தினர்.

இதையடுத்து, சேத்துப்பட்டு தூயலூர்து அன்னை பங்கு  தந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பங்கு தந்தையர்கள் சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தினர். இரவு முழுவதும் நடந்த திருப்பலியில் சேத்துப்பட்டு, வந்தவாசி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு தூயலூர்து அன்னையை வழிபட்டனர்.

Tags : Christians ,moon ,Mata Mountain ,
× RELATED ஊத்துக்கோட்டை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்