திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் 4 ஊராட்சி செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல்

திருவண்ணாமலை, நவ.14: திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 4 ஊராட்சி செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த சு.ஆண்டாப்பட்டு, தலையாம்பள்ளம், வெைறயூர், இசுக்கழிகாட்டேரி ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிவர்கள் கல்வி தகுதி, இருப்பிடம், சாதி சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு கிராம ஊராட்சி பணியிடத்துக்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி பகுதிக்குள் வசிக்க வேண்டும். அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலரை(கி.ஊ) நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வருகிற 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.இந்த தகவலை திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) இரா.ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvannamalai Panchayat Union ,Regional Secretary ,
× RELATED ஆவடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர்...