×

நெல் வயல்களில் மழைநீர் புகுந்து பயிர்கள் நாசம்

சின்னமனூர், நவ. 14: சின்னமனூரில் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நுழைந்து நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சின்னமனூர் பகுதிகளில் முதல் போகத்திற்கான நடவுப்பணியில் விவசாயிகள் ஈடுபட்டதால் தற்போது இரண்டு மாத பயிராக நெற்பயிர்கள் தீவிரமாக வளர்ந்து வருகிறது. முல்லைப் பெரியாற்றின் பாசனநீரை நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர் முறை வைத்து நான்காயிரம் ஏக்கர் வயல் வெளிகளுக்கு பிரித்து அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பெய்து வருவதால், ஆங்காங்கே வயல்வெளிகளில் மழைநீர் புகுந்து நிலத்தில் தேங்கி வருகிறது.

இதனால் நெற்பயிர்கள் அழுகி விடக்கூடாது என்பதற்காக தண்ணீரை விவசாயிகள், காயவிட்டு வருகின்றனர். சின்னமனூர் அருகே குச்சனூர் பகுதிகளிலும், குச்சனூர், சீலையம்பட்டி சாலையிலும் சுமார் 100 ஏக்கரு’கு மேலாக வயல் வெளிகளில் மழைநீர் நுழைந்து வளர்ந்துள்ள நெற்பயிர்களை சாய்த்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து வேளாண்துறை அதிகாரிகளுடன் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை காப்பாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Rainwater harvesting ,paddy fields ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை