×

சேந்தமங்கலத்தில் கொமதேக செயற்குழு கூட்டம்

சேந்தமங்கலம், நவ.14: நாமக்கல் கிழக்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம், சேந்தமங்கலத்தில் நடந்தது. கூட்டத்திற்கு  மாவட்ட செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். நகர செயலாளர் சந்திரன்  வரவேற்றார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி கலந்து கொண்டு  பேசினார். கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுவை மாவட்ட  தலைமையகத்தில் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தேர்தலுக்கு அனைத்து  பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை நிறைவேற்ற கட்சியினர்  செயல்பட வேண்டும். மேட்டூர் உபரிநீரை சங்ககிரி, திருச்செங்கோடு, ராசிபுரம்,  சேந்தமங்கலம், பரமத்திவேலூர் தொகுதிகளில் உள்ள ஏரி குளங்களில் நிரப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல்  நிதியிலிருந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொகுதிக்கு கட்டிடம்  கட்டுவதற்கு ₹60 லட்சம் ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்த அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.  இந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன்,  மாவட்ட துணை செயலாளர் தவமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Komadeke Working Committee Meeting ,Senthamangalam ,
× RELATED சேந்தமங்கலம் அருகே மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்