×

ஆரணி அருகே மனுநீதி நாள் முகாமில் 74 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஆர்டிஓ வழங்கினார்

ஆரணி, நவ.14:  ஆரணி அருகே நடந்த மனுநீதிநாள் முகாமில் 74 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆர்டிஓ மைதிலி வழங்கினார்.
ஆரணி அடுத்த மெய்யூர் ஊராட்சியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நேற்று நடந்தது. தாசில்தார் தியாகராஜன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லலிதா, மண்டல துணை தாசில்தார்கள் சுதா, சத்யன் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி வரவேற்றார்.
இதில் ஆர்டிஓ மைதிலி, 74 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, வேளாண் இடுபொருட்கள், பயிர் பாதுகாப்பு மருந்து, உயிர் உரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அப்போது ஆர்டிஓவிடம் பொதுமக்கள் கூறுகையில், `மெய்யூர் ஏரியை சுற்றியுள்ள நீர்வரத்து கால்வாய்களை தனிநபர்கள் செய்துள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உயர்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் பள்ளி வளாகத்தை சுற்றிலும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அங்கு கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. கொசு மருந்தும் அடிப்பதில்லை’’’’ என்றனர்.

அப்போது ஆர்டிஓ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் வேளாண்மை அலுவலர் பவித்ர தேவி, ஆர்ஐ வசந்தி, விஏஓக்கள் சரவணன், ஆனந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : day camp ,Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...