×

புதிய பஸ் ஸ்டாண்ட் பணியை விரைந்து தொடங்க வேண்டும்

நாமக்கல், நவ.14: நாமக்கல் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புதிய புறநகர் பஸ் ஸ்டாண்ட் பணிகளை, விரைவாக தொடங்க வேண்டும் என, விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.இதுகுறித்து, தரிசு நில விவசாயிகள் சங்க மாநில தலைவர் ரவிச்சந்திரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல்லில் தற்போது உள்ள பஸ் ஸ்டாண்ட், மிகவும் குறுகலாகவும், போதிய இடவசதி இல்லாமலும் இருக்கிறது. இதனால் மணிக்கூண்டு பகுதியில் இருந்து, சேலம் சாலை, கோட்டை சாலை முழுவதும், காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், வேலைக்கு செல்பவர்கள், பணியாளர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். இவற்றை தவிர்க்க, நாமக்கல் புறநகர் பகுதியில் அறிவிக்கப்பட்டபடி, புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியை, விரைவாக தொடங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : bus stand ,
× RELATED ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தொடக்கம்