பெரிசாகவுண்டம்பட்டியில் சுற்றுச்சுவர் இல்லாத அரசு தொடக்கப்பள்ளி

அரூர், நவ.14:அரூர் அருகே, பெரிசாகவுண்டம்பட்டி அரசு தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கம்பைநல்லூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில், பெரிசாகவுண்டம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மெயின்ராட்டில் இருப்பதால், சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சில சமூக விரோதிகள், இரவு ேநரங்களில் மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பள்ளியில் இருந்து வெளியே வரும் மாணவர்கள் சாலையில் வேகமாக வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. எனவே, சமூக விரோதிகள் அத்துமீறி பள்ளி வளாகத்தில் நுழைவதை தடுக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்ட, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Related Stories:

>