×

எல்லப்புடையாம்பட்டியில் மொல்லன் ஏரியை தூர்வார வலியுறுத்தல்

அரூர், நவ.14: அரூரை அருகே எல்லப்புடையாம்பட்டியில் உள்ள மொல்லன் ஏரியை குடிமராமத்து பணி திட்டத்தில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.  அரூர் அருகே எல்லப்புடையாம்பட்டி ஊராட்சியில், 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட மொல்லன் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வள்ளிமதுரை வரட்டாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, நீர்வரத்துக்கான கால்வாய் வசதி உள்ளது. ஏரியில் நீர் நிரம்பினால், சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல், எல்லப்புடையாம்பட்டி, கௌாப்பாறை கிராம பகுதியிலுள்ள மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகில் உள்ள விவசாயிகள் சிலர், ஏரி நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். எனவே, ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குடிமராமத்து  திட்டத்தின் கீழ், மொல்லன் ஏரி மற்றும் ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Lake Mollan ,Ellapadayampatti ,
× RELATED தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்...