காலமுறை ஊதியம் கேட்டு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி

தர்மபுரி, நவ.14: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், காலமுறை  ஊதியம் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு பேரணி நடந்தது.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட கிளை சார்பில், காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, கவன ஈர்ப்பு பேரணி தர்மபுரியில் நடந்தது. மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் நாகராஜன் பேரணியை தொடக்கி வைத்தார். மாநில செயலாளர் மஞ்சுளா, மாவட்ட செயலாளர் காவேரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ₹9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது. தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் தொடங்கிய இப்பேரணி, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நிறைவடைந்தது. மாவட்ட பொருளாளர் தேவகி நன்றி கூறினார்.

Related Stories:

>