கிணற்றில் விழுந்த வாலிபர் மீட்பு

கமுதி, நவ.14:  கமுதி கண்ணார்பட்டியில் கிணற்றில் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். கமுதியில் கண்ணார்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் உத்தண்டராஜன் (32). இவர் கண்ணார்பட்டி ஊரணி கரையில் உள்ள 40 அடி கிணற்றின் சுவர் மீது

அமர்ந்து இருக்கிறார். அப்போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு, குளிக்க வந்தவர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் சார்லஸ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி, உத்தண்டராஜனை உயிருடன் மீட்டனர். பின்னர் கமுதி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories:

>