×

காருண்யா பல்கலைகழகத்தின் வேளாண் மாணவர்கள் நெல் அறுவடை செய்தனர்

கோவை,நவ.14: கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் வேளாண் மாணவர்களால் காருண்யா பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் அறுவடை செய்யப்பட்டது. முன்னதாக பேராசியர் ஜேக்கப் அண்ணாமலை வரவேற்றார். பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் மற்றும் இவாஞ்சலின் பால்தினகரன் ஆகியோர் அறுவடை செய்து விழாவை துவக்கி வைத்தனர். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர்கள், புதிய தொழில்நுட்பங்களை கண்டறிந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உணவு உற்பத்தி பிரச்னைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தியதோடு, வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உணவு,நீர்,ஆற்றல் மற்றும் உடல் நலம் தொடர்பான ஆராய்ச்சியின் அவசியத்தையும் எடுத்துரைத்தனர். மழை நீரை கொண்டு மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட கோ-51 ரக நெல் பயிரின் மகசூல் ஏக்கருக்கு 2.5 டன் வரை இருந்தது. இதில் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், இணைவேந்தர்கள்,பதிவாளர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karunya University ,
× RELATED உலக மகளிர் தினத்தையொட்டி சீஷா,...