×

பவானி தொகுதியில் ரூ.4.57 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

பவானி, நவ.14: பவானி சட்டமன்ற தொகுதியில் ரூ.4.57 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது.  பவானி ஊராட்சி ஒன்றியம், ஓடத்துறை, கவுந்தப்பாடி, வைரமங்கலம், சின்னபுலியூர், பெரியபுலியூர், ஆலத்தூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில்  தார்ச்சாலை அமைத்தல், மயான சாலை மேம்பாடு,  குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுதல், அங்கன்வாடி மையம் கட்டுதல், பள்ளிக்கு சுற்றுச்சுவர், தானிய சேமிப்புக் கிடங்கு, கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட 36 திட்டப் பணிகளை அமைச்சர் கருப்பணன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, பவானி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிலிங்கம், உதவி பொறியாளர் ரமேஷ்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : constituency ,Bhavani ,
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...