திருவள்ளூவர் சிலை அவமதிப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி பரமன்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

உடன்குடி,நவ.14: திருவள்ளூவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பரமன்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் முரசுதமிழப்பன் தலைமை வகித்தார். உடன்குடி ஒன்றிய செயலர் தமிழ்வாணன் வரவேற்றார். முற்போக்கு மாணவர் கழக மாநில துணை செயலர் தர்மராஜ், கருத்தியல் பரப்பு அணி மாநிலதுணைசெயலர் தமிழ்குட்டி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வக்கீல் ராஜ்குமார், திருச்செந்தூர் தொகுதி செயலர் வெற்றிவேந்தன், மகளிர் விடுதலை இயக்க மாவட்டதுணைசெயலர் செல்வி, ஒன்றிய செயலர்கள் சாத்தான்குளம் ஜெயராமன், வைகுண்டம் ராஜ்வளவன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, வணிகர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர், விடுதலை கலை இலக்கிய அணிசெயலர் சிவா, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மாவட்ட துணைஅமைப்பாளர் நயினார், நிர்வாகிகள் பாலகுருஅருள்ராஜ், ஜக்கையன், உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய துணைசெயலர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Tags : Thiruvalluvar Statue ,Liberation Panthers Party Paramankurichi ,
× RELATED திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தமிழக...