×

தொடர் மழையால் குளங்கள் நிரம்பின நாசரேத் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்

நாசரேத், நவ.14: தொடர் மழையினால் நாசரேத் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியதால் விவசாய பணி தீவிரமாக நடந்து வருகிறது.நாசரேத் பகுதிகளான வெள்ளமடம் பெரியகுளம், நொச்சிகுளம், பிள்ளையன்மனைகுளம், முதலைமொழிகுளம், புதுக்குளம் கடந்த சில மாதங்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தது. இந்நிலையில் கடந்த இருவாரங்களுக்கு முன் புயல் சின்னத்தால் பருவமழை பெய்தது. இதையடுத்து குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெரியகுளம், நொச்சிகுளம், பிள்ளையன்மனைகுளம், முதலைமொழிகுளம், புதுக்குளம் நிரம்பின. கடந்த 3 நாட்களாக வெள்ளரிக்காயூரணி புதுக்குளம் நிரம்பி பிரகாசபுரம் மறுகால் தாண்டி தண்ணீர் விழுகிறது.

இதையடுத்து நாசரேத் பகுதியில் வயல்களில் டிராக்டர் மூலம் உழவு பணிகளும், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குளங்களில் தண்ணீர் நிரம்பியதால் நாசரேத் பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : area ,Nazareth ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...