தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்

தூத்துக்குடி, நவ.14: தூத்துக்குடி மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் இப்ராஹிம்(48), மீனவர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேசைய்யா என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் 4 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றார். அவர்கள் நேற்று தூத்துக்குடியில் இருந்து கிழக்கே 25 நாட்டிக்கல் மைல் தொலைவில் நங்கூரம் பாய்ச்சி படகை நிறுத்தி மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது மீன்வலையை விரித்தபோது எதிர்பாராத விதமாக இப்ராஹிம் படகில் இருந்து தவறி கடலில் விழுந்துவிட்டார். அவரை சக மீனவர்கள் மீட்க முயன்றனர். அதற்குள் அலைகளில் சிக்கிய அவர் நீரில் மூழ்கியதாக தெரிகிறது.இதுகுறித்து மரைன் போலீசாருக்கும், கடலோர பாதுகாப்பு படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கடலில் விழுந்த மீனவர் இப்ராஹிமை தேடும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். மேலும், மீனவர்களும் பல படகுகளில் சென்று அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ், எஸ்ஐ ஜானகிராமன் விசாரித்து வருகின்றனர்

Related Stories:

>