ஓய்வு பெற்ற அதிகாரிக்கு பிரிவுபசார விழா

சேலம், நவ.13: சேலம், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் தலைமை எழுத்தராகவும், மதுரை பெஞ்ச் மற்றும் சென்னை மாநில நுகர்வோர் ஆணையத்தில் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வந்த சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த சுகுமார் ஓய்வுபெற்றார். இதையடுத்து, சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பிரிவுபசாரா விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வக்கீல் அசோகன், வக்கீல்கள் தரன், முரளி மற்றும் நுகர்வோர் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டு சுகுமாருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

விழாவில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைமை எழுத்தர்கள் கணபதி, செல்வக்குமார், இந்திராணி, முன்னாள் மாவட்ட தலைமை எழுத்தர்கள் தர், ராணி, நுகர்வோர் நீதிமன்ற அலுவலர்கள் மாணிக்கம், கண்ணன், குணசேகரன், குமரசேன், வீரம்மாள், பிரான்சிஸ் சேவியர், கனகா, வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைமை எழுத்தர் பத்மாவதி வரவேற்றார். நுகர்வோர் நீதிமன்ற அலுவலர் மகேஸ் நன்றி கூறினார்.

Related Stories:

>