×

திருச்செங்கோட்டில் பௌர்ணமி கிரிவலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்செங்கோடு, நவ 13: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலை சுற்றி பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் கிரிவலம் சென்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பக்தர்களுக்கு சாம்பார் சாதம், தயிர்  சாதம், நீர்மோர்  ஆகியவை வழங்கினர். கிரிவலத்தை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில், ஆபத்து காத்த விநாயகர் கோயில், ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில், அருள்மாரியம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர். பௌர்ணமி அன்னதான விழாக்குழு சார்பில் அருள்மாரியம்மன் கோயிலில் பக்தர்களு–்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : devotees ,Tiruchengode ,Purnami Kirivalam ,
× RELATED பாலத்தில் மோதி கார் நொறுங்கியது 4 பக்தர்கள் பரிதாப பலி