×

கடத்தூர் பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோர்

கடத்தூர், நவ.13: கடத்தூர் பகுதியில் கழுதை பால் விற்பனை ஜோராக நடந்தது. கடத்தூர் பகுதியில் ேநற்று 4 கழுதைகளை ஓட்டிக்கொண்டு வந்து ஒருவர் பால் விற்பனையில் ஈடுபட்டார். கழுதை பாலை கறந்து கூவி கூவி விற்பனை செய்தார். அதனை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி குடித்தனர். கழுதை பால் குடித்தால் பல்வேறு நோய்கள் குணமாகும் என்பதால் வாங்கி பருகுவதில் ஆர்வம் காட்டினர். இதுகுறித்து கழுதை பால் விற்பனையில் ஈடுபட்ட கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்து என்பவர் கூறுகையில், கழுதைப் பால் பல்வேறு மருத்துவ குணம் கொண்டது.
இதை குடித்தால் சளி, இருமல், ஆஸ்துமா, விஷக்கடி, வெட்டை சூடு உட்பட பல்வேறு நோய்கள் குணமாகும். சிறிய குழந்தைகள் என்றால், ஒரு சங்கடை அளவு போதுமானது. பெரியவர்களுக்கு, 50 மில்லி கொடுக்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நாங்கள், பால் விற்பனைக்காகவே கழுதை வளர்க்கிறோம். பல்வேறு கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்து வருகிறோம். 10 மில்லி அளவுக்கு ஒரு சங்கடை ₹50க்கும், 50மில்லி ₹200க்கும், 1லிட்டர் ₹4ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Tags : Jore ,area ,Kadathur ,
× RELATED வாட்டி வதைக்கும்...