×

சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

தர்மபுரி, நவ.12: தர்மபுரி மாவட்ட சிவன் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவன்கோயிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு நேற்று முன்தினம் அன்னாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல், நெசவாளர்காலனி சிவன் கோயில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோயில், தீயணைப்பு நிலைய சிவன் கோயில், ஒட்டப்பட்டி லிங்கேஸ்வரர் கோயில், காரிமங்கலம் அருணேஸ்வரர் கோயில், அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோயில், வைத்தியநாதர் கோயில்,

பாலக்கோடு பால்வண்ணநாதர் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள சிவன் கோயில்களில், ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடந்தது. அரூர்: அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரர் கோயிலில், ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 11 முதல் 3 மணி வரை சுவாமிக்கு அன்னம், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் வழிபாட்டு சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags : Shiva Temple ,
× RELATED சிவகாசி சிவன் கோவிலில் ராஜகோபுரம்...