×

வர்ணீஸ்வரர் கோயிலை புனரமைக்க ேவண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

அரூர், நவ.13: அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள வர்ணீஸ்வரர் கோயிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பழமையான வர்ணீஸ்வரர் கோயில் உள்ளது. பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி மற்றும் விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர். பழங்கால ஓலைச் சுவடிகளில் இந்த கோயிலின் வரலாறு, கோயில் தீர்த்தம் குறித்து கூறப்பட்டுள்ளது. அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்தகைய புகழ்பெற்ற வர்ணீஸ்வரர் கோயில்,

கடந்த சில வருடங்களாக சிதலமடைந்து காணப்படுகிறது. மேற்கூரை சிதிலமடைந்து காணப்படுவதுடன், கோயிலின் சுவர்களில் விரிசல் விட்ட நிலையில் உள்ளது. அரூர் நகரின் மொத்த சாக்கடை நீரும், கோயில் குளத்தை ஒட்டிய படியே செல்கிறது. இதனால் சாக்கடை நீர், கோயில் குளத்தில் கலக்கிறது. எனவே குளத்தை சீரமைக்கவும், கோயிலை புனரமைக்க அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Varniswarar Temple: Emphasis on Devotees ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா