21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும்

கரூர், நவ. 13: ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கரூர் மாவட்ட கிளை கூட்டம் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. முத்துசாமி, நாகேந்திர கிருஷ்ணன், கருப்பன், பொதுசெயலாளர் சிவசங்கரன், ஆனந்தன், சதாசிவம், பெரியசாமி, கருப்பண்ணன் முன்னிலை வகித்தனர். ராமசாமி நன்றி கூறினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 5 சதவீத அகவிலைப்படி வழங்கியதற்கு பாராட்டு தெரிவிப்பது, ஒருநபர் குழு அறிக்கையை வெளியிட்டு 21மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>