×

கரூர் நகரின் அனைத்து சாலைகளிலும் நடைமேடைகளில் சிலாப் கற்கள் உடைந்ததால் பாதசாரிகள் அவதி

கரூர், நவ. 13: நடைமேடைகளில் சிலாப் கற்கள் உடைந்திருப்பதால் பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் நகரின் அனைத்து சாலைகளிலும் பாதசாரிகள் நடப்பதற்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடைகளில் உள்ள சிலாப் கற்கள் உடைந்து காணப்படுகின்றன. கோவை சாலை, ஜவகர்கடை வீதி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சாலை போன்ற இடங்களில் போடப்பட்ட சிலாப் கற்கள் உடைந்துள்ளதால் பாதசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் காலை நேரத்தில் ஏராளமானவர்கள் நடைமேடையில் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். இவர்களும் நடைப்பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர். சேதம் அடைந்துள்ள சிலாப்புகளை மாற்றி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Pedestrians ,city ,Karur ,roads ,
× RELATED ராமோஜி பிலிம் சிட்டி தலைவர் ராமோஜி...