பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருமாவளவன் மரியாதை

தஞ்சை, நவ. 13: தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவிரோதிகள் அவமதிப்பு செய்தனர். இது பல்வேறு தரப்பினர் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை இதில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து திருவள்ளுவர் சிலையை பாதுகாக்கும் வகையில் இரும்பு கம்பிகளாலான கூண்டு அமைக்கப்பட்டது.இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மாலை பிள்ளையார்பட்டிக்கு வந்தார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories:

>