நெம்மேலி கிராமத்தில் மயானத்திற்கு செல்ல தார்சாலை அமைக்கப்படுமா?

மன்னார்குடி, நவ. 13 : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் 54 நெம்மேலி கிராமத்தில் 150 க்ரும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக் கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ள பொது மயானத்திற்கு செல்லும் மண் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.மழைக் காலமான தற்போது இந்த மண் சாலை சேறும் சகதியுமாக இருக்கிறது. அதனால் மழைக் காலத்தில் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த சாலையின் இரு புறங்களிலும் தேவையற்ற செடிகள் வளர்ந்து சாலையே தெரியாத அளவிற்கு புதர்கள் மண்டி காணப்படுகிறது. மேலும் மயானத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் ஈம சடங்குகள் செய்ய தண்ணீருக்காக அலைய வேண்டிய சூழல் உள்ளது. மயானத்தின் அருகே குளம் இருந்தும் பலனில்லை. குளம் போதிய பராமரிப்பின்றி தூர் வாரப் படாமல் காடு போல் காணப் படுகிறது. எனவே மேற்கண்ட பகுதியில் உள்ள குளத்தை தூர் வாரவும், மயானத்திற்கு செல்லும் மண் சாலையை சீரமைத்து தார் சாலையாக மாற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>