×

கொள்ளிடம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வயல்வெளிப் பள்ளி

கொள்ளிடம், நவ.13: நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வயல்வெளிப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளிடம் அருகே சாமியம் கிராமத்தில் விவசாயிகளுக் கென்று வயல்வெளிப்பள்ளி நடைபெற்றது.
கொள்ளிடம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுப்பையன் தலைமை வகித்து வயல்வெளிப்பள்ளியை துவக்கி வைத்து பேசினார். அப்போது, அவர் பேசுகையில் கொள்ளிடம் வட்டாரத்தில் 15 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வயல்வெளிப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் 25 விவசாயிகள் இருப்பார்கள்.

இதன் நோக்கம் பயிரைத்தாக்கும் பூச்சிகள் என்ன விதமானவை எத்தகைய பூச்சிகள் என்பதை அறிந்து கொள்வார்கள். வாரம் ஒரு முறை கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட முன்னோடி விவசாயியின் கிராமத்தில் ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கப்படும். தொடர்ந்து 6 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். வேளாண்துறை அதிகாரிகள், நிபுணர்கள் முன்னோடி விவசாயிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு வாராவாரம் பயிற்சியளிப்பார்கள் என்றார். வேளாண் அலுவலர் விவேக் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Tags : Farmers' Field School ,
× RELATED விபத்தில் உயிரிழந்த மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி