×

கடைக்கு சென்றவரை வழிமறித்து பணம் பறிப்பு

மயிலாடுதுறை, நவ.13:மயிலாடுதுறை அருகே கடைக்கு சென்றவரை வழிமறித்து பணம் பறித்து மிரட்டல் விடுத்த ஆசாமி கைது செய்யப்பட்டார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சின்ன இழுப்பப்பட்டு சேர்ந்த கலியமூர்த்தி மகன் கண்ணன் (42 ). இவர் நேற்று முன்தினம் மணல்மேட்டில் உள்ள கடைவீதியில் மளிகை பொருள் வாங்குவதற்கு சென்றார். மணல்மேடு சிவன் கோயில் அருகே சென்றபோது, அங்கே வந்த அறிவை நல்லூர் மெயின் ரோடு ராமகிருஷ்ணன் மகன் நம்ப இருக்கிற ஜெயமூர்த்தி (47) பேர் வழிமறித்து அவர் சட்டை பையில் வைத்திருந்த ரூ.6,500ஐ கத்தியை காட்டி மிரட்டி பிடுங்கிக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மண்மேடு போலீசில் கண்ணன் அளித்த புகாரின் பேரில் ஜெயமூர்த்தியை கைது செய்து காவலில் அடைத்துள்ளனர்.


Tags :
× RELATED பணம் பறித்த வாலிபர் கைது