×

தரங்கம்பாடியில் 1100 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கல்

தரங்கம்பாடி, நவ.13: நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் 1100 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது.இதற்கான நிகழ்ச்சிக்கு தரங்கம்பாடி நூற்றாண்டு லயன்ஸ் சங்க தலைவர் பொன்ராஜேந்திரன் தலைமை வகித்தார். தரங்கம்பாடி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். லயன்ஸ் சங்க செயலாளர் நெடுமாறன் வரவேற்றார். தரங்கம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் கவுசிகா நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். சித்த மருத்துவ மருந்து ஆளுநர் மணிமேகலை மற்றும் லயன் சங்கத்தினர், வியாபாரிகள் சங்கம், ஆட்டோ சங்கத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 1100 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது. சபை குரு சாம்சன் மோசஸ் நன்றி கூறினார்.


Tags : Tharangambadi ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...