×

கோர்ட் வளாகத்தில் புதிதாக கட்டப்படும் காவல்நிலைய கட்டிடத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

நாகை, நவ.13: நாகை கோர்ட் வளாகத்தில் புதிதாக கட்டப்படும் வெளிப்பாளையம் காவல் நிலைய கட்டிடத்தில் பல மாதங்களாக மழைநீர் தேங்கியிருப்பதால் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.நாகை கோர்ட் வளாகத்தில் வெளிப்பாளையம் காவல் நிலையம் இயங்கி வந்தது. கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் கடந்த 3 ஆண்டு காலத்திற்கு முன்பு இங்கிருந்த காவல் நிலையத்தை காலி செய்து கொண்டு வெளிப்பாளையம் அருகே உள்ள ஆயுதப்படைக்கு சொந்தமான கட்டிடத்திற்கு மாற்றினர். இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர்ட் வளாகத்தில் வெளிப்பாளையம் காவல் நிலையம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணிகள் நடைபெறும் வளாகம் உள்ளே கட்டுமான பணிக்கு தேவையான தண்ணீர்களை நிரப்பி கொள்வதற்காக தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி திறந்த வெளியில் இருப்பதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பியுள்ளது.

மேலும் பல நாட்களாக தண்ணீர் அந்த தொட்டியில் நிரம்பி இருப்பதால் மாசு அடைந்து பச்சை நிறமாக மாறியிருப்பதுடன் டெங்கு நோயை பரப்பும் கொசுக்களும் உற்பத்தியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அரசு கட்டிங்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திலேயே இப்படி டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் அளவிற்கு தண்ணீர் தொட்டிகள் இருந்தால் பொதுமக்கள் தங்களது வீடுகளை து£ய்மையாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
டெங்கு நோயை பரப்பும் வகையில் எந்த ஒரு தனியார் அல்லது அரசு கட்டிடங்கள் இருந்தால் அந்த கட்டிட உரிமையாளர் அல்லது கட்டிட ஒப்பந்தகாரர் மீது அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அரசு அலுவலர்கள் பணியும் செய்யும் கோர்ட் வளாகத்தில் உள்ளேயே அரசு கட்டிடம் நடைபெறும் இடத்தில் இப்படி டெங்கு நோய் பரப்பும் தொட்டி இருப்பதை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இனியும் கண்மூடி இருக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.


Tags : police station ,court complex ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து