×

சீர்காழி அடுத்த அல்லிவிளாகம் சிங்கார காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சீர்காழி, நவ.13: சீர்காழி அருகே அல்லி விளாகம் சிங்கார காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி கோயிலில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றது. பின்னர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் பக்தர்கள் செய்திருந்தனர்.


Tags : Temple ,Sirkazhi ,Sinhara Kaliamman ,
× RELATED தமிழகத்தில் கண்டும், காணாமல் விடப்பட்டதால் பறிபோகும் கோயில் நிலங்கள்