மக்களை வெளியேற்றும் வனத்துறை இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

வருசநாடு, நவ.13: குமணந்தொழு அருகே இந்திய கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் வனத்துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடமலை மயிலை ஒன்றியம் குமணந்தொழு அருகே பொன்னன்படுகை கிராமத்தில் வனத்துறை அதிகாரிகள் விவசாயிகளையும் மக்களையும் அப்பகுதியைவிட்டு வெளியேற வழங்கிய நோட்டீஸ் நடவடிக்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் பெத்தாச்சிஆசாத், முன்னிலை வகித்து பேசினார். தேனி மாவட்ட துணை செயலாளர் இளையராஜா, கடமலை மயிலை ஒன்றிய பொருளாளர் செல்லன், ஏஐடியுசி ஆலன், பொன்னன்படுகை திமுக ஊராட்சி செயலாளர் சந்திரன் மற்றும் கிராமபொதுக்கள் கலந்துகொண்டனர்.

Tags : evacuation ,
× RELATED நிலக்கோட்டையில் ஆக்கிரமிப்பு அகற்றம்