×

2 டாஸ்மாக் கடைகள் மூடல்

கீழக்கரை. நவ. 13: கீழக்கரையில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து இரண்டு மதுக்கடைகளும் மூடப்பட்டதால், திமுக.வினர் பொதுமக்களுக்கு மோர் வழங்கினர். கீழக்கரையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் இரண்டு மதுக்கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. இதை தொடர்ந்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அகற்றக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனால் நேற்று முன்தினம் இரண்டு மதுக்கடைகளும் மூடப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில், திமுக நகர் மாணவரணி செயலாளர் ஹமீது சுல்தான் தலைமையில் அனைவருக்கும் நீர்மோர் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் வர்த்தக அணி தலைவர் நயினார், செயலாளர் ஜகுபர் மற்றும் நிர்வாகிகள் சுகைபு. இப்திகார் ஹஸன். அப்துல் காதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Closure ,Task Shops ,
× RELATED போலீசாருக்கு கொரோனா எதிரொலி திருச்செங்கோடு புறக்காவல் நிலையம் மூடல்