×

ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

சாயல்குடி, நவ. 13: திருஉத்திரகோசமங்கை மற்றும் சாயல்குடி பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு அன்னாபிஷேகம் நேற்று நடந்தது. ஐப்பசி மாத பவுர்ணமியில் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கம், நேற்று சிறப்பு அன்னாபிஷேகத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதருக்கு விபூதி, சந்தனம், திருமஞ்சனபொடி, திரவியபொடி, பால்,பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகைபொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 100 கிலோ எடையுள்ள சாதம், பச்சை காய்கனிகள் படைத்தும், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதுபோன்று சாயல்குடி அருகே மாரியூர் பவளநிற வள்ளியம்மன் சமேத பூவேந்தியநாதர், மேலக்கிடாரம் சிவகாமி அம்பாள் சமேத திருவனந்தீஸ்வரமுடையார், சாயல்குடி மீனாட்சியம்மன் சமேத கைலாசநாதர், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி சமேத செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் சமேத ஆதிசிவன், ராமநாதபுரம் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், விஷேச பூஜைகள் நடந்தது.

கோயில்களிலுள்ள மூலவரான சிவனுக்கு 11 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனைகளும், கூட்டு பஜனையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ேமலும் கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதுபோன்று ஆப்பனூர் அரியநாயகி அம்மன், மாரியூர் பூவேந்தியநாதர், பவளநிறவள்ளியம்மன் கோயில், சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் பாதாளகாளியம்மன், மேலக்கொடுமலூர் குமரன், முதுகுளத்தூர் சுப்ரமணியர், வழிவிடு முருகன். சாயல்குடி அருகே கூரான்கோட்டை தர்மமுனீஸ்வரர், டி.எம் கோட்டை உச்சிமாகாளி, கடலாடி சந்தனமாரியம்மன், பத்திரகாளியம்மன், காமாட்சியம்மன் ஆகிய கோயில்களில் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. பொதுமக்ககளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : temples ,Shiva ,Ipaci ,
× RELATED கோயில், வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி குறைந்தது