×

கராத்தே பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவிகளுக்கு சீருடை

கீழ்பென்னாத்தூர், நவ.13: கீழ்பென்னாத்தூர் அருகே கராத்தே பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது. கீழ்பென்னாத்தூர் அடுத்த ராயம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கராத்தே பயிற்சி பெறும் மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் எம்.மலர் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வை.பொய்யாமொழி வரவேற்றார்.

வட்டார கல்வி அலுவலர்கள் ரா.செல்வம், வே.ராமலு, கூட்டுறவு சங்க துணை தலைவர் சி.அ.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட அளவில் பங்கேற்ற இளம் விஞ்ஞானிகள் ஆய்வு கட்டுரை, அதற்கான முயற்சிகள் மற்றும் அனுபவம் குறித்து அறிவியல் ஆசிரியை கு.ஜானகி பேசினார். தொடர்ந்து, பள்ளி மாணவிகளின் கராத்தே மற்றும் கலைநிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் இ.ஆல்வின் சாமுவேல், க.கற்பகம் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் ஏ.குலசேகரன் நன்றி கூறினார்.

Tags : government school students ,
× RELATED ஆடியோ + வீடியோவுடன்... அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு மொபைல் app!